TIN சான்றிதழ் கட்டாயமாக்கல் 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு: உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவிப்பு
குறிப்பிட்ட 8 வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது 2027 ஏப்ரல் 01 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக, 2026 செப்டம்பர் 22 ஆம் திகதியிட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, 2026 நவம்பர் 01 முதல் இக்கட்டாயத் தேவை நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் இத்தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், பொதுமக்களிடையே TIN சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் காணப்படும் அதிக அளவிலான கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்த ஒத்திவைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

