“தீங்கு விளைவிக்கும் நபர்கள் வெற்றி பெறுவதைப் பார்ப்பது கடினம்”

“தீங்கு விளைவிக்கும் நபர்கள் வெற்றி பெறுவதைப் பார்ப்பது கடினம்” – ட்ரம்ப் நிர்வாகத்தை விமர்சித்த அமண்டா செய்ஃப்ரைட்!

பிரபல ஹொலிவுட் நடிகை அமண்டா செய்ஃப்ரைட், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மற்றும் அரசியல் சூழல் குறித்து தனது விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 

2025 மார்ச் மாதம் TheWrap ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், ஹொலிவுட்டில் நிலவும் அதிகாரம் சார்ந்த அச்சச் சூழலை ட்ரம்ப் அரசாங்கத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “அமெரிக்க அரசாங்கத்திலும் இதே நிலைமையை நாம் காண்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

 

மேலும், 2025 டிசம்பரில் Who What Wear நேர்காணலில், ட்ரம்பை மறைமுகமாகக் குறிப்பிட்டு, “தந்திரமானவர்களும் தீங்கு விளைவிப்பவர்களும் வெற்றி பெறுவதைப் பார்ப்பது எப்போதும் கடினமானது. நமது ஜனாதிபதி அதற்கு மிகச் சிறந்த உதாரணம்” என்ற கருத்தையும் வெளியிட்டார்.

 

இதற்கு முன்னதாக, மறைந்த அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கிர்க்கை “வெறுப்புணர்வு கொண்டவர்” எனக் குறிப்பிட்டதற்காக எழுந்த விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்திருந்தார். அதேவேளை, கிர்க்கின் படுகொலை மிகவும் கொடூரமானது என்றும், எந்த மனிதரும் இத்தகைய வன்முறையைச் சந்திக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

 

அமெரிக்க அரசியல் சூழல் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாகத் தனது கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அமண்டா செய்ஃப்ரைடின் இந்தப் பேச்சுகள் சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளன.

Recommended For You

About the Author: admin