காசாவில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனுபவித்து வரும் பேரழிவுக்கு நெதன்யாஹூவே காரணம்! லூலா டா சில்வா பகிரங்க குற்றச்சாட்டு
காசாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமானப் பேரழிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் நடவடிக்கைகளே காரணம் என பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹமாஸுக்கு எதிரான போர் என்ற பெயரில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்படுவதாகவும், அதிகாரத்தில் நீடிப்பதற்காக நெதன்யாஹூ இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் லூலா முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், பாலஸ்தீன மக்களின் உயிர் வாழும் உரிமையை வலியுறுத்தியுள்ள அவர், இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தனித்தனி நாடுகளாக அமைதியுடன் வாழ வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
லூலாவின் கருத்துகள் இஸ்ரேல் தரப்பிலிருந்து எதிர்ப்புகளையும், சர்வதேச அளவில் அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

