ஈரான் யுத்தமே தேர்தல் தோல்விக்குக் காரணம்! – ஒப்புக்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் (Midterm Elections) குடியரசுக் கட்சி சந்தித்த பெரும் தோல்விக்கு ஈரானுடனான யுத்தமும், அதன் காரணமாக அதிகரித்த கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலையேற்றமுமே முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் வெற்றியை வாழ்த்தியுள்ள அவர், ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகள் சரியான முடிவாக இருந்தபோதிலும், அந்தப் போரும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளும் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, எரிபொருள் விலையேற்றம் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்துள்ள நிலையில், அது ஆளும் குடியரசுக் கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகள் தற்போது ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.

