பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீடு

பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீடு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325ஆம் இலக்கத் தீர்மானத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி வெளியிடப்பட்டது. இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மரி கத்தரின் மார்ட்டின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அமைதியைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் மோதல் சூழல்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.

 

மேலும், பெண்களின் தலைமைத்துவம், சமத்துவம் மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தீர்மானங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin