ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விதித்த இரண்டு நிபந்தனைகள் குறித்து,
கத்தார் பிரதமர் ஷேக் முகமது ஈரானில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சில மாதங்களாக நடைபெற்று வரும் சூழலில்,
தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் சில நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.
இரு நாடுகளும் நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்காத்தால் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த காலத்தில் அமெரிக்கா விதித்த நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

