பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிநாட்டுப் பயணம்!
2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையிலிருந்து பயணமாகியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி சனிக்கிழமை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு, அன்டிகுவா மற்றும் பார்புடாவின் தலைநகரான சென்ட் ஜான்ஸில் நடைபெறவுள்ளது.
ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின்போது, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், உறுப்பு நாடுகளுக்குப் பொதுவான முக்கிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார்.
பிரதமர் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

