நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை! – பழைய விலைகளே தொடரும்

நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை! – பழைய விலைகளே தொடரும்

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ள போதிலும், நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தை விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று விகிதங்களில் நிலவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த மாதங்களில் நடைமுறையில் இருந்த விலைகளே எதிர்வரும் நவம்பர் மாதத்திலும் தொடரும்.

அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,750 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 815 ரூபாவாகவும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin