பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெற இனி முன்பதிவு கட்டாயம்: குடிவரவு திணைக்களம் அறிவிப்பு!
பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் இணையவழியில் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி கட்டுப்பாட்டாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

