ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்
ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது கடமைகளைத் தவறவிட்டமை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரின் மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளின் கடமை தவறல்கள் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தலைமையக பொலிஸ் பரிசோதகரைப் பணி இடைநீக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் முடிவில் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

