தோஹா – ரியாத் இடையிலான மேலும் பல விமானச் சேவைகளை ரத்து செய்தது கத்தார் ஏர்வேஸ்!
ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் தோஹா மற்றும் ரியாத் இடையே இயங்கும் சில விமானச் சேவைகளை இன்று 11ஆம் திகதி ரத்து செய்வதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, QR1170/1171, QR1172/1173 மற்றும் QR1236/1237 ஆகிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஒக்டோபர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் குறித்த வழித்தடங்களில் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை எனத் தெரிவித்துள்ள கத்தார் ஏர்வேஸ், பயணிகள் தங்களது விமானப் பயணங்கள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது கைப்பேசிச் செயலி ஊடாகச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

