வடக்கில் 3400 ஆண்டு பழமையான நாகர் கால மனித எச்சங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர் கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்று என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த... Read more »

“சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்தவர் இன்று போதிதர்மர்“

இலங்கையை பிறப்பிடமாகவும் எகிப்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் தான் மகிந்த கொடிதுவக்கு. இவர் தற்போது எகிப்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரை பார்த்த இடங்களில் எல்லாம் பொது மக்கள் கையெடுத்து வணங்குகின்றார்கள். காலில் விழுந்து ஆசீர் பெறுகின்றார்கள். அதில் பௌத்த மதகுருமாரும் அடங்குகின்றார்கள். கௌதம புத்தருக்காக... Read more »
Ad Widget

‘வாட்ஸ்அப்’ செயலியில் அறிமுகமாகும் புதிய வசதி

வாட்ஸ்அப்’ இல் வீடியோ காலில் இருக்கும் போது பிறருடன் ஆடியோ (Audio),மியூசிக் (Music),வீடியோ (Video) உள்ளிட்டவைகளைப் பகிர்ந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. உலகளவில் வாட்ஸ் அப் செயலியானது இலட்சக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து... Read more »

அம்பலாங்கொடையில் சஜித்தின் அரசியல் “ஒப்பரேசன்“: பல ரகசிய சந்திப்புகள்

சான் விஜேலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையால் அம்பாலங்கொடை தொகுதி அமைப்பாளரை நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய நெருக்கடிகள் எழுந்திருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சஜித்தின் நெருங்கிய நண்பருமான... Read more »

ஒரு போத்தல் குடிநீரில் 240,000 பிளாஸ்டி துகள்கள்

பிளாஸ்டிக் போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரில் நூறாயிரக் கணக்கான புற்றுநோயை உண்டாக்கும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதி நவீன லேசர் ஸ்கேனிங் நுட்பங்களை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மேற்கொண்ட அண்மைய ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகம்... Read more »

இரத்தினக்கல் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையில் இரத்தினக்கல் துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் அதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் தேசிய பொருளாதாரத்திற்கும், தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டிய... Read more »

புத்தரின் மறு அவதாரம் எனக் கூறியவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

புத்தரின் மறு அவதாரம் என்றுக் கூறிக்கொண்ட ஆன்மீகவாதி ராம் பகதூர் போம்ஜோன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்மண்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 33 வயதான ராம் பகதூர் போம்ஜோன் காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CIB) தெரிவித்துள்ளது. பல்வேறு... Read more »

2024 ஐபிஎல் போட்டிகளை இலங்கையில் நடத்த விருப்பம்

இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) சில போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், அந்தக் காலப்பகுதியில் ஐபிஎல்... Read more »

25ஆவது கிராண்ட் சிலாம் கிண்ணத்தை வெல்வாரா ஜோக்கோவிச்?

அவுஸ்திரேலியப் “ஓபன்“ டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கோவிச், தகுதிச்சுற்று வழியாக நுழையும் ஆட்டக்காரருடன் மோதவுள்ளார். ஜோக்கோவிச் இம்முறையும் பட்டம் வென்றால் அது அவருக்கு 11ஆவது அவுஸ்திரேலியப் “ஓபன்“ கிராண்ட் சிலாம் கிண்ணமாக அமையும். ஒட்டுமொத்தத்தில், 25வது கிராண்ட்... Read more »

அமெரிக்க எண்ணெய் கப்பலை சிறைப்பிடித்தது ஈரான்

ஓமன் வளைகுடாவில் அமெரக்க எண்ணெய் கப்பலை தங்கள் படைகள் கைப்பற்றியதாக ஈரான் கூறியுள்ளது. ஈரானின் கடற்படையினரால் “செயின்ட் நிகோலஸ்” என்ற குறித்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் வியாழக்கிழமை (11) செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படை, நீதிமன்ற... Read more »