ஒரு போத்தல் குடிநீரில் 240,000 பிளாஸ்டி துகள்கள்

பிளாஸ்டிக் போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரில் நூறாயிரக் கணக்கான புற்றுநோயை உண்டாக்கும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதி நவீன லேசர் ஸ்கேனிங் நுட்பங்களை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மேற்கொண்ட அண்மைய ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை மேற்கொள்காட்டி இந்த தகவலை அமெரிக்காவின் நேஷனல் அகடெமி ஆஃப் சயின்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆய்வாளர்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மூன்று முன்னணி நிறுவனத்தின் குடிநீர் போத்தல்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

ஆய்வுகளுக்கு அமைவாக ஒரு லீட்டர் பிளாஸ்டிக் குடிநீர் போத்தலில் சராசரியாக 240,000 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குடிநீரில் பிளாஸ்டிக் இருப்பதை விஞ்ஞானிகள் முன்னைய பல ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஆய்வில் ஒரு லிட்டர் குடிநீரில் சராசரியாக சுமார் 300 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் நானோ பிளாஸ்டிக்கை ஆய்வு செய்வதற்கான புதிய ஆய்வு பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அளவு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதை விட சுமார் 10 முதல் 100 மடங்கு அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை பருகுவதானது மனித உடல்களில் சிறிய பிளாஸ்டிக் துகள்களை சேர்க்கின்றது.

இது மனித உடலின் முக்கிய உறுப்புகளில் கண்டறியப்படாத பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நானோ பிளாஸ்டிக்குகள் ஏற்கனவே புற்றுநோய், கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் பிறப்பு குறைபாடுகளுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய ஆய்வின் மூலம் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் முன்னர் கண்டறியப்பட்ட மைக்ரோபிளாஸ்டிக்ஸை விட மிக சிறிய துகள்கள் ஆகும்.

இவை‍ மிகவும் சிறியதாக இருப்பதால் அவை அதிகம் நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன, அவை நேரடியாக இரத்த அணுக்கள் மற்றும் மூளைக்குள் நுழைந்து பாதிப்பினை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

வருடத்துக்கு 450 மில்லியன் டன் என்றளவுக்கு உலகம் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்து வருகின்றது. இதில் மீள் சுழற்சிக்கு உள்ளாகுபவை மிகவும் அரிய மடங்கு.

பெருமளவு பிளாஸ்டிக் கழிவாக மண்ணில் சேர்கிறது. சிறுசிறுதுகள்களாக சிதைந்து அவை மண்ணிலும், நீரிலும் ஊடுருவுகின்றன. பின்னர் மைக்ரோ மற்றும் நானோ வடிவங்களில் மீண்டும் மனிதனையே தாக்குகின்றன. நாளுக்கு நாள் இவற்றின் அளவும் அதிகரித்தே வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin