அம்பலாங்கொடையில் சஜித்தின் அரசியல் “ஒப்பரேசன்“: பல ரகசிய சந்திப்புகள்

சான் விஜேலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையால் அம்பாலங்கொடை தொகுதி அமைப்பாளரை நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பாரிய நெருக்கடிகள் எழுந்திருந்தன.

இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சஜித்தின் நெருங்கிய நண்பருமான சுஜீவ சேனசிங்கவிடம் பிரச்சினைக்கு தீர்வுகாண பொறுப்பை கையளித்திருந்தார்.

சான் விஜேலால் டி சில்வா சு.க மீது அதிருப்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவர்களில் ஒருவராக பணியாற்றிவந்த சான் விஜேலால் டி சில்வா, கடந்த 2ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்திருந்தார். இவரை ஐ.ம.ச.வில் இணைத்துக்கொள்ள சஜித் பல அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

சு.கவின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளில் சான் விஜேலால் டி சில்வா, மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக சஜித்தின் நெருங்கிய நண்பர்கள், அரசல் புரசலாக சஜித்தின் காதுகளுக்கு போட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த விடயத்தை கண்டுகொள்ளாதவராக சஜித் இருந்துள்ளார். கடந்த மாதம் சான் விஜேலால் டி சில்வாவின் நெருங்கிய நண்பராக இருந்த பழனி திகாம்பரம், இந்த விடயத்தை சஜித்திடம் கூறி, சான் விஜேலால் டி சில்வாவுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளார்.

மக்கள் பலத்தை உணர்ந்த சஜித்

இதன் பின்னர் இவருக்கும் ஏற்பட்ட நட்பு மற்றும் சான் விஜேலால் டி சில்வாவின் மக்கள் பலத்தை அறிந்து அவரை கட்சியில் இணைத்துக்கொள்ளும் “ஒப்பரேசனை“ சஜித் ஆரம்பித்திருந்தார். அந்த விடயத்திலும் வெற்றிக்கண்டார்.

அதன் பிரகாரம் கடந்த 2ஆம் திகதி சான் விஜேலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டார். அவர் அம்பலாங்கொடை தொகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அம்பலாங்கொடை தொகுதியின் தலைமை அமைப்பாளர் பதவியை வழங்குவதிலும் சஜித் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை அமைப்பாளராக பந்துலால் பண்டாரிகொட கடமையாற்றி வந்தார்.

அம்பலாங்கொடை தொகுதி அமைப்பாளர் நியமனத்தில் ஏற்பட்ட நெருக்கடி

கடந்த பொதுத் தேர்தலில், தேர்தல் பிரசாரத்துக்குச் செலவு செய்யத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் பந்துலால் தோல்வியடைந்திருந்தார். ஆனால், அவரிடமிருந்து பதவியை பறிக்கும் எண்ணம் சஜித்துக்கு இருக்கவில்லை.

காரணம் பந்துலால் பண்டாரிகொட இங்கு மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு நபர். ஜனாதிபதித் தேர்தலில் இவரது பங்களிப்பும் கட்சிக்கு காத்திரமாக இருக்கும் என சஜித் எண்ணினார்.

அதன் காரணமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகானும் பொறுப்பை சஜித்தின் நெருங்கிய நண்பர் சுஜீவ சேனசிங்கவிடம் ஒப்படைந்திருந்தார். சுஜீவ, பந்துலால் பண்டாரிகொட மற்றும் சான் விஜேலால் டி சில்வாவுடன் பல சந்திப்புகளை நடத்தி இறுதியில் இருவரை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார்.

பந்துலால் பண்டாரிகொட தொடர்ந்து அமைப்பாளர் பதவியில் தொடரும் தலைமை அமைப்பாளராக சான் விஜேலால் டி சில்வாவை நியமிக்கும் முன்மொழிவை சஜித்திடம் வழங்கியுள்ளார். அதன் பிரகாரமே இந்த “ஒப்பரேசன்“ முடிவுக்கு வந்துள்ளது.

புலம்பும் மைத்திரி

இதனால் சஜித் மீது கடும் அதிருப்தியில் சு.கவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் யார் பக்கம் சாய்வது எனத் தெரியாது கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடையே புலம்பி வருவதாகவும் தெரிய வருகிறது.

இதேவேளை, அம்பலாங்கொடை தொகுதியின் சு.கவின் அமைப்பாளராக வாஸ் குணவர்தனவை நியமித்துள்ளார்

Recommended For You

About the Author: admin