சீனப் பிரஜையிடம் ரூ. 2 கோடி கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்த சுமார் 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

