இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைக்குழியான யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மே 15 முதல் மூன்று கட்டங்களாக 92 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் இத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
ஜூலை 20 அன்று மீட்கப்பட்ட 8 என்புக்கூடுகளில் 2 சிறுவர்களுடையவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் 6 என்புக்கூடுகள் மீட்கப்பட்டதுடன், கால் மேல் கால் போட்ட நிலையில் கண்டறியப்பட்ட மற்றொரு என்புக்கூட்டை முழுமையாக மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
இச்சம்பவம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

