வாட்ஸ்அப்’ இல் வீடியோ காலில் இருக்கும் போது பிறருடன் ஆடியோ (Audio),மியூசிக் (Music),வீடியோ (Video) உள்ளிட்டவைகளைப் பகிர்ந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
உலகளவில் வாட்ஸ் அப் செயலியானது இலட்சக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்தவைகையில் தற்போது வீடியோ காலில் இருக்கும் போது பிறருடன் ஆடியோ ,மியூசிக் ,வீடியோ உள்ளிட்டவைகளைப் பகிர்ந்துகொள்ளும் synchronised முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வீடியோ காலில் இருக்கும் போது ஒரு நபர் ஸ்கிரீன் ஷேர் செய்தால் அவர் ஆடியோ ஏதேனும் ப்ளே செய்தால் அதை மற்றவர்களிடத்திலும் பகிரலாம்.
இதனை குறித்த ஒரு அழைப்புக்கு (one-on-one) மாத்திரமன்றி, குரூப் காலிலும் பயன்படுத்தலாம்.
இருவர் அல்லது குழுவாக ஒன்றாக சேர்ந்து வீடியோக்களைப் பார்க்க முடியும். இதன் போது வீடியோ காலின் போது shared ஆடியோ பயன்படுத்தலாம். பயனர்கள் தங்கள் வீடியோ பிளேபேக் அனுபவங்களை synchronise செய்யலாம்.
இந்த அம்சங்கள் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சோதனை முழுமைப்பெறும் பட்சத்தில் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.