இலங்கையை பிறப்பிடமாகவும் எகிப்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் தான் மகிந்த கொடிதுவக்கு.
இவர் தற்போது எகிப்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரை பார்த்த இடங்களில் எல்லாம் பொது மக்கள் கையெடுத்து வணங்குகின்றார்கள்.
காலில் விழுந்து ஆசீர் பெறுகின்றார்கள். அதில் பௌத்த மதகுருமாரும் அடங்குகின்றார்கள்.
கௌதம புத்தருக்காக உயிரைத் தியாகம் செய்யுமாறு அடியார்களை கோரும் ஒரு பௌத்த மத போதகராக இவர் தன்னை காட்சிபடுத்தி கொள்கின்றார்.
பௌத்த மதத்தை திரிபுபடுத்தும் வகையிலான போதனைகளை முன்னெடுத்து வருவதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அவலோகிகேஷ்வர என்ற பெயரால் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.
ஏன் அவரை அனைவரும் வணங்குகின்றார்கள்? காரணம் என்ன?
மகிந்த கொடிதுவக்கு தன்னை ஒரு இறைவனின் பிரதிநிதி என சொல்லிக்கொண்டு சமூகத்தை ஏமாற்றி வாழும் ஆசாமி.
இவரின் மாயைகளை கண்டு அதில் திளைத்து போன பொதுமக்கள் அவரை கடவுளின் பிரதிநிதி என நம்புகின்றார்கள்.
அதனால் அனைவரும் அவரை கடவுளை போல் தொட்டு வழிபடுகின்றார்கள்.
கீமே காணும் காணொளியில் அதை காணலாம்…👇
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, நாம் அது தொடர்பில் ஆராய ஆரம்பித்தோம். அதில் எமக்கு அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைத்தன.
தன் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்
இவர் முற்றிலும் ஒரு போதைக்கு அடிமையானவர் என பல தகவல்கள் அம்பலாமாகியுள்ளன.
மேலும், பூஜ்ய பலாங்கொட கஸ்ஸன தேரர் இவர் தனது சொந்த மகளையே துஷ்ப்பிரயோகம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை தாம் வெளியிட தயாராக உள்ளதாக பொலிஸில் தற்போது முறைப்பாடும் செய்துள்ளார்.
மேலும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்து, எகிப்தில் குறித்த நபர் நாய்களை பராமரிக்கும் வேலைகளை செய்து வந்தார் என்பதையும் அண்மையில் கஸ்ஸன தேரர் அம்பலப்படுத்தியிருந்தார்.
மகிந்த கொடித்துவக்கு போதைக்கு அடிமையானவர் என்பதையும் புகைப்பட ஆதாரம் மூலம் நிரூப்பித்திருந்தார்.
மகிந்த கொடிதுவக்கு பற்றி பூஜ்ய பலாங்கொட கஸ்ஸன தேரர் வெளியிட்ட தகவல்கள் என்ன?
புத்தருக்காக உடலை எரித்துக் கொள்ளுமாறு இவர் தனது அடியார்களுக்கு போதனை செய்வதாக பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறான மத போதகர்களினால் பலர் தவறான தூண்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மீண்டும் ஒரு மத போதகர் அடியார்களை தவறான முடிவை மேற்கொள்ளுமாறு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளுமாறு தூண்டுதல் பாரிய குற்றச் செயலென காஷ்யப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நபர் நாட்டுக்கு வருகை தர முன்னதாகவே குறித்த நபர் தொடர்பில் குற்ற விசாரணை பிரிவிற்கும், ஏனைய உரிய தரப்புகளுக்கும் தகவல்கள் வழங்கிய போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கண்மூடித்தனமான அடியார்கள் இந்த நபர் தனது மகளை தகாத தீண்டலுக்கு உட்படுத்திய நபர் என காஷ்யப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் இந்த நபர் நாய்களை பராமரித்து கொண்டிருந்தவர் எனவும் நாட்டுக்கு திரும்புவதற்கு கூட பணம் இல்லாமல் ஏனைய இலங்கையர்கள் பணம் திரட்டி நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு நபரின் பின்னாலேயே கண்மூடித்தனமான அடியார்கள் பின் தொடர்வதாகவும் பௌத்த பிக்குணிகளும் இவரை வணங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நபர் தேரவாத பௌத்தத்தை விமர்சனம் செய்து மஹாநாயக்க பௌத்த கொள்கைகளை போற்றும் வகையிலான திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதாக தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் பௌத்த துறவி அல்ல எனவும் மனநோயாளி எனவும் இவருக்கு மனநோய் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமெனவும் காஷ்யப்ப தேரர் கோரியுள்ளார்.
விசாரணை ஆரம்பம்
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களில் இவ்வாறு வெளியாகும் காணாளிகளை கண்டு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர்.
பூஜ்ய பலாங்கொட கஸ்ஸன தேரர், இந்த சம்பவம் தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தேரர்கள் மொளனம் காப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.