சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட்டில் 13 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள்!

சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட்டில் 13 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் அக்டோபர் 2 முதல் 6 வரை நடைபெற்ற சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 13 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள் அக்டோபர் 7 அன்று நாடு திரும்பினர்.

23 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 24 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் கணிதப் பிரிவில் 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களும், விஞ்ஞானப் பிரிவில் 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களும் பெறப்பட்டன.

 

பாடசாலை மற்றும் தேசிய மட்டப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மாணவர்களுக்கான முழு விமானப் பயணச் சீட்டுச் செலவுகளையும் முதன்முறையாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin