விளக்கமறியலில் உள்ள ஷிரந்திக்கு மருத்துவ பரிசோதனை
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை தொடர்பில் வைத்தியரின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேத்தன்ன தெரிவித்துள்ளார்.
அரச வங்கியொன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாய் நிதி பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஷ கடந்த நாள் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அரச வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

