நாட்டில் வீதி விபத்துக்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்தது!

நாட்டில் வீதி விபத்துக்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்தது!

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி 1 முதல் அக்டோபர் 6 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் பதிவான 1,988 கொடூர விபத்துக்களில் மொத்தம் 2,095 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துக்களில் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளன.

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்துவதே இவ்வாறான உயிர்ப்பலிகளுக்குப் பிரதான காரணியாக அமைந்துள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, வீதி விதிகளைச் சரியாகப் பின்பற்றி அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு ஓட்டுநர்களுக்குப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin