1,540 புதிய கிராம உத்தியோகத்தர் நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி!

1,540 புதிய கிராம உத்தியோகத்தர் நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி!

கிராமப்புற மக்களை நகரங்களை நோக்கி இடம்பெயரச் செய்வதை விட, கிராமங்களிலேயே பொருளாதார வாய்ப்புகளையும் அடிப்படை வசதிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிவிருத்தி நோக்கமாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

கிராம நிலதாரி சேவையின் தரம் III வகுப்பிற்குத் தகுதி பெற்ற 1,540 புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை திறமையின் அடிப்படையில் மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

 

மேலும், கிராம நிலதாரிகளுக்கான அலுவலக, சீருடை மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் தகவல் தொடர்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.

Recommended For You

About the Author: admin