செங்கடலை மீட்க சவூதி அதிரடி திட்டம்: ஹூதிகளுக்கு எதிராக தொடங்கும் புதிய போர்!

செங்கடலை மீட்க சவூதி அதிரடி திட்டம்: ஹூதிகளுக்கு எதிராக தொடங்கும் புதிய போர்!

செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவத் தாக்குதலை நடத்த சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக பிராந்திய மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் பாப் எல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணையை ஹூதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து வர்த்தகப் பாதை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை மீட்க சவூதியின்
கண்காணிப்பு மற்றும் விமானப்படை ஆதரவுடன், யேமன் படைகள் தரைவழித் தாக்குதலை நடத்தவுள்ளன.

அமெரிக்கா உளவுத்துறை தகவல்களையும், துருக்கி மற்றும் பாகிஸ்தான் இராணுவ உபகரணங்களையும் வழங்கி இதற்கு ஆதரவளிக்கின்றன. எதிர்வரும் வாரங்களில் இத்தாக்குதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin