அஸ்வெசும பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை 11,500 ஆக அதிகரிப்பு – மானியமும் ரூ. 2 இலட்சமாக உயர்வு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கையை 11,500 ஆக அதிகரிப்பதற்கும், குடும்பம் ஒன்றுக்கான அதிகபட்ச மானியத் தொகையை ரூ. 2 இலட்சமாக உயர்த்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வாழ்வாதார வலுவூட்டல் திட்டத்தில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, தற்போது 10,975 ஆகக் காணப்படும் தகுதியான பயனாளிக் குடும்பங்களின் எண்ணிக்கை 11,500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மானியத் தொகையான ரூ. 150,000, ரூ. 200,000 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான யோசனையை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு விரிவுபடுத்தப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin