போலி கூகுள் இணைய மோசடி வலையமைப்பை முறியடித்த பாகிஸ்தான்

போலி கூகுள் இணைய மோசடி வலையமைப்பை முறியடித்த பாகிஸ்தான் : சீனப் பிரஜைகளும் கைது

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் சர்வதேச இணைய மோசடி வலையமைப்புடன் தொடர்புடைய 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய இணைய குற்றப் புலனாய்வு முகமை மேற்கொண்ட சோதனைகளில், மூன்று சட்டவிரோத அழைப்பு மையங்கள் முறியடிக்கப்பட்டன. கூகுள் பிரதிநிதிகளாக போலியாக நடித்து மோசடி செய்தல், போலி ஆன்லைன் வேலைத்திட்டங்கள் மற்றும் காதல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

சோதனைகளின் போது 306 கைப்பேசிகள், 383 கணினிகள் மற்றும் 299 கணினித் திரைகள், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் சீனப் பிரஜைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பிரேசிலுடனான தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.

Recommended For You

About the Author: admin