கல்முனையில் வீட்டில் தீப்பரவல்: தீயணைப்புச் சேவை குறித்து மக்கள் அதிருப்தி

கல்முனையில் வீட்டில் தீப்பரவல்: தீயணைப்புச் சேவை குறித்து மக்கள் அதிருப்தி

கல்முனை, தைக்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரக் கோளாறே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ள போதிலும், அதற்கான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் வழங்கப்படவில்லை.

சம்பவ இடத்திற்குக் கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்ததாகவும், தீயணைப்பு நடவடிக்கையின்போது நீரை மீள்நிரப்புவதற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாமதத்தினால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், அவசரச் சேவைகளின் தயார் நிலையை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலும், மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் கல்முனை மாநகர சபை உரிய விளக்கத்தை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin