ஈரான் அதிபருக்கு புதின் உறுதி!
“இந்தக் கடினமான காலகட்டத்தில், ஈரானுக்குத் தேவையான உதவிகளை வழங்க ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது” – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் புதின் மேலும் கூறியதாவது:
🔹 ஈரானுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யா தொடர்ந்து வழங்கி வருகிறது.
🔹 தற்போதைய இராணுவ மற்றும் அரசியல் சூழ்நிலையிலும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்கிறது.
🔹 கடந்த ஆண்டில் காணப்பட்ட ஒத்துழைப்பின் வேகத்தை தொடர்ந்து பேணுவதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
🌍 ரஷ்யா – ஈரான் உறவு தொடர்கிறதா?
இந்த இரு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

