இத்தாலியிலும் வெடித்த மாபெரும் கலவரம்!

இத்தாலியிலும் வெடித்த மாபெரும் கலவரம்!

கலவர பூமியானது இத்தாலி!!

மிலான் வீதிகளில் 500 இராணுவ வீரர்களைக் களமிறக்கினார் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி!

பிரான்ஸைத் தொடர்ந்து இத்தாலியிலும் ‘வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக்’ கண்டித்து நடைபெற்ற சமூகப் போராட்டங்கள் மாபெரும் வன்முறையாகவும் சூறையாடல்களாகவும் உருவெடுத்துள்ளன.

 

இதனைக் கட்டுப்படுத்த, இத்தாலியின் பொருளாதாரத் தலைநகரான மிலான் நகரில் காவற்துறையினருக்கு உதவியாக இந்த ஆண்டின் இறுதி வரை 500 இராணுவ வீரர்களைக் களமிறக்கப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ”

 

போராடுவது மக்களின் உரிமை; ஆனால் நமது நகரங்களைச் சூறையாடுவது உரிமையாகாது” என அவர் ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலிய அமைச்சரவை பல புதிய சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கலவரங்களில் ஈடுபடும் சிறுவர்களை எளிதாகச் சிறையிலடைக்க வழிவகை செய்தல்,

 

சிறுவர்கள் ஏற்படுத்தும் சேதங்களுக்கு அவர்களின் பெற்றோருக்கே தண்டப்பணம் (அபராதம்) விதித்தல் மற்றும் “வன்முறைப் போராட்டத்தில் பங்கேற்றல்” என்ற புதிய குற்றப் பிரிவை உருவாக்குதல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

 

இந்த வார இறுதி வன்முறைகளில் 200 காவற்துறையினர் காயமடைந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 330 பேரில் பாதிப் பேர் ‘வெளிநாட்டுப் பின்னணி’ கொண்டவர்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனினும்,

 

இராணுவத்தினருக்குக் காவற்துறைக்குரிய முழு அதிகாரங்களை வழங்கும் முடிவை மிதவாதக் கொள்கையுடைய இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா எதிர்த்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

 

பிரான்சைப் போலவே இத்தாலியிலும் மாணவர்களும், உழவர்களும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கியுள்ளனர். மிலான் நகரின் மையப்பகுதியில் உள்ள உயர்தர நவநாகரீக ஆடைக் கடைகள் பல சூறையாடப்பட்டதால்,

 

முக்கிய வணிக நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூடியும், கண்காட்சிக் கண்ணாடிகளை அகற்றியும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளன.

 

மறுபுறம், எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்துச் சுமையுந்து (லாரி) ஓட்டுநர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களால் தெற்கு இத்தாலியின் பல பகுதிகளில் பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

நெருக்கடியைத் தணிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மேட்டியோ சால்வினி 480 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்த போதிலும்,

 

உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை முடக்கப் போராட்டங்கள் தொடரும் எனத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

 

ஐரோப்பா முழுவதும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான மக்களின் கோபம் காட்டுத்தீயாகப் பரவி வருவது அரசுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது!

Recommended For You

About the Author: admin