ரஷ்ய வான்படை தளங்கள் மீது தீவிர தாக்குதல்!!

ரஷ்ய வான்படை தளங்கள் மீது தீவிர தாக்குதல்!!

மாஸ்கோவின் மௌனம் குறித்து எழும் கேள்விகள்!

ரஷ்யாவின் போரிசோக்லெப்ஸ்க் (Borisoglebsk) இராணுவ விமானப்படை தளம் மற்றும் சென் பீட்டர்ஸ்பேர்க் (St. Petersburg) பகுதிகளை இலக்கு வைத்து

அண்மையில் உக்ரைனிய படைகளால் தீவிர ஆளில்லா வானூர்தி (Drone) மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தொடர்ச்சியாக ரஷ்யாவின் முக்கியமான தளங்கள் மற்றும் உள்நாட்டுப் பகுதிகள் தாக்கப்பட்டு வரும் நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இது

 

தொடர்பாக என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்ற விவாதம் சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

வொரோனேஷ் (Voronezh) பிராந்தியத்தில் உள்ள போரிசோக்லெப்ஸ்க் விமானப்படை தளம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானங்கள் தாக்கப்பட்டதாக உக்ரைனிய தரப்பு உரிமை கோரியுள்ளது.

 

செயற்கைக்கோள் படங்களில் தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் சேதங்கள் தென்பட்டாலும்,

 

எத்தனை விமானங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன என்பது குறித்த ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளிவரவில்லை.

 

இதேவேளை, சென் பீட்டர்ஸ்பேர்க் எல்லை வரை உக்ரைனிய ட்ரோன்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாஸ்கோ வழக்கம்போல “தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன”

 

என்ற பொதுவான அறிக்கைகளுடன் சம்பவத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த முனைகிறதா என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.

 

ரஷ்யாவின் எல்லைப்புறப் பகுதிகளைத் தாண்டி, உள்நாட்டு மையங்கள் மற்றும் முக்கியமான போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள

 

தளங்களை நேரடியாக குறிவைக்கும் உத்தியை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது. உள்நாட்டு வான் பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனங்கள் அம்பலமாகி வருவது ரஷ்ய தலைமைக்கு பெரும் அரசியல் மற்றும் இராணுவ அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin