விகாரைக்குள் புகுந்து பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது தாக்குதல்: கம்பஹா வைத்தியசாலையில் அனுமதி!
ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாரையில் இறுதிச்சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட கூட்டத்தின்போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் சீலரத்ன தேரருக்கு அளிக்கப்பட்ட இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

