மது அருந்திவிட்டு கட்டணம் செலுத்தாத யுவதிக்கு மொட்டையடிப்பு: தாய்லாந்தில் கொடூரம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பார் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய வாடிக்கையாளரான பெண்ணுக்கு பார் ஊழியர் ஒருவர் கேமரா முன்னிலையில் மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் போஸ்ட் (New York Post) அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் 25 அன்று பிங்க்லாவோ (Pinklao) பகுதியில் உள்ள பிரபல பார் ஒன்றிற்கு 18 வயது இளம் பெண் ஒருவர் போலியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி நுழைந்துள்ளார்.
அங்கு உணவும் மதுவும் அருந்திய அவருக்கு 60,000 தாய் பாட் (சுமார் 1,800 அமெரிக்க டாலர்) கட்டணமாக வந்துள்ளது.

