நேபாள வெள்ளப் பாதிப்புக்கு கட்டாரின் அவசர மனிதாபிமான உதவி

நேபாள வெள்ளப் பாதிப்புக்கு கட்டாரின் அவசர மனிதாபிமான உதவி

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பொருட்களுடன் கட்டார் ஆயுதப் படைகளுக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேபாளத்தைச் சென்றடைந்துள்ளது.

வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள 52,000 பேருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த நிவாரண உதவித் திட்டம் அமைப்படைந்துள்ளது. குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நீரிறக்கும் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள், மின் விளக்குகள், உணவுப் பொருட்கள் மற்றும் கூடாரங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

 

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்கும், களத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் கட்டார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழு (Qatari International Search and Rescue Group) அங்கு பணியில் ஈடுபட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin