துருக்கி மற்றும் மெக்சிகோவில் இலங்கைப் பொருட்களுக்கு அமோக வரவேற்பு

துருக்கி மற்றும் மெக்சிகோவில் இலங்கைப் பொருட்களுக்கு அமோக வரவேற்பு- ஏற்றுமதி வருவாய் கணிசமாக உயர்வு

துருக்கி மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் துருக்கிக்கான இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 92.48% வரை அதிரடி உயர்வைப் பதிவு செய்துள்ளது.

 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 79.42 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த துருக்கிக்கான ஏற்றுமதி வருமானம், இவ்வாண்டு 152.87 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

 

இதேவேளை, மெக்சிகோவுக்கான ஏற்றுமதியும் 34.24% வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம் மெக்சிகோவுக்கான ஏற்றுமதி வருமானம் 124.70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

 

சர்வதேச சந்தையில் இலங்கைப் பொருட்களுக்கான கேள்வி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதையே இந்த வளர்ச்சி காட்டுகிறது.

Recommended For You

About the Author: admin