லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

