UAE-ல் உள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கிய ஈரான்! பதற்றத்தில் மத்திய கிழக்கு

UAE-ல் உள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கிய ஈரான்! பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் லராக் தீவு மீது அமெரிக்கப் படைகள் முன்னெடுத்த தாக்குதலுக்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள வான்படைத் தளம் மீது ஈரான் ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

குறித்த தளத்தில் அமெரிக்க இராணுவப் படையினரும், அவர்களின் உலங்கு வானூர்திகளும் நிலைநிறுத்தப்பட்டிருந்த பகுதிகளை இலக்கு வைத்தே இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

ஈரானின் இந்த நேரடி பதில் நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளதுடன், தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Recommended For You

About the Author: admin