கொழும்பில் 463 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

கொழும்பில் 463 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் 3 பேர் கைது!

கொழும்பில் கொள்கலன் (Container) ஒன்றில் மறைத்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் (Methamphetamine) கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்களை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் (CCIB) கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்போடு தொடர்புடைய முக்கிய கடத்தல்காரர்கள் மற்றும் உள்ளூர் முகவர்களை அடையாளம் காண்பதற்காக மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin