63 இலங்கை தூதரகங்களுக்குப் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஆரம்பம்
வெளிநாடுகளில் இயங்கும் 63 இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பிரதிநிதித்துவ அலுவலகங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வெளிநாட்டுத் தூதரக சேவைகளை டிஜிட்டல் முறைக்கு நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் பொதுமக்கள், தூதரக சேவைகள், கன்சுலர் தகவல்கள் மற்றும் படிவங்களை .gov.lk உத்தியோகபூர்வ இணைய முகவரிகள் ஊடாக மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் அணுக முடியும்.
ஒரே தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்தின் கீழ் அனைத்துத் தூதரகங்களையும் கொண்டுவந்து, பொதுமக்களுக்கான அணுகலை எளிதாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

