ஜப்பானிடமிருந்து வடமேல் மாகாணத்திற்கு 3 புதிய அம்பியூலன்ஸ்கள்

ஜப்பானிடமிருந்து வடமேல் மாகாணத்திற்கு 3 புதிய அம்பியூலன்ஸ்கள்

ஜப்பான் – இலங்கை சர்வதேச நட்புறவு அமைப்பினால் வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு ரூ. 2 கோடிக்கும் அதிக பெறுமதியிலான 3 புதிய அம்பியூலன்ஸ்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டன.

வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மாகாணத்தில் உள்ள 150 சுகாதார நிறுவனங்களின் அவசர சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் இந்த அம்பியூலன்ஸ்கள், மாரவில, நிக்கவரெட்டிய மற்றும் தம்பதெனிய வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் குணவர்தன, ஜப்பானிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin