இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி, 2க்கு 0என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதனையடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 208 ஓட்டங்களை பெற்ற நிலையில், பாகிஸ்தானிய அணிக்கு 389 ஓட்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் இந்த வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தநிலையில் 194 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

