தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!

தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!

அமெரிக்க மேஜர் லீக் சாக்கர் கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) அணிக்காக விளையாடும் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது தொழில் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரே போட்டியில் 4 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

இந்த கோல்களின் உதவியுடன், ஊகு மாண்ட்ரீல் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 7-1 என்ற கோல் கணக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

39 வயதான மெஸ்ஸி இந்தப் போட்டியில் 4 கோல்களை அடித்ததுடன் ஒரு கோலுக்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் இந்த பருவத்தில் 18 கோல்களுடன் ஆடுளு தொடரின் கோல் அடிக்கும் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இன்டர் மியாமி அணி அனைத்துப் போட்டிகளையும் சேர்த்து தொடர்ந்து 5 ஆட்டங்களாக வெற்றி பெறாமல் இருந்த மோசமான சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

அணியின் இடைக்கால பயிற்சியாளர் கில்லர்மோ ஹோயோஸ் (Guillermo uoyos) மற்றும் சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து இன்டர் மியாமிக்கு மாறியுள்ள பிரேசில் வீரர் கசெமிரோ (Casemiro) ஆகியோர் மெஸ்ஸியின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin