கோமரங்கடவலையில் 5 குளங்களை புனரமைக்க 104 மில்லியன் ரூபாய் முதலீடு
கோமரங்கடவலை பிரதேசத்தில் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 104 மில்லியன் ரூபாய் முதலீட்டில் 5 கிராமிய குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் குளங்கள் மற்றும் பயன் பெறும் நிலப்பரப்பு:
கல்கடவல வெவ: 133 ஏக்கர்
மைல வெவ II: 80 ஏக்கர்
கிம்புல்பிட்டிய வெவ: 43 ஏக்கர்
வெலி வெவ: 39 ஏக்கர்
தெமட்ட வெவ: 16 ஏக்கர்
இதன் மூலம் மொத்தமாக 311 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி நீர்ப்பாசன வசதியைப் பெறுவதுடன்,
. இப்பகுதி விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமும் நீர் பாதுகாப்பும் கணிசமாக வலுப்பெறும்.

