நீண்ட விடுமுறையின் பின் கொழும்பு திரும்புவோருக்காக இன்று விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்!

நீண்ட விடுமுறையின் பின் கொழும்பு திரும்புவோருக்காக இன்று விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்!

நீண்ட வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து, கிராமங்களிலிருந்து கொழும்பு நோக்கித் திரும்பும் பயணிகளின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இன்று (30) விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.

அதிகரித்து வரும் பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாத்தறை, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளிலிருந்து விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பயணப் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin