புதிய கல்வியாண்டை (Rentrée scolaire) முன்னிட்டு, பாரிஸ் நகரசபையானது (Ville de Paris) அங்கு வசிக்கும் சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான பொதுப் போக்குவரத்துச் செலவுகளை முழுமையாகத் திருப்பியளிக்கும் திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது.
இதன்படி, மாணவர்களுக்கான ‘இமாஜின் ஆர்’ (Imagine R) வருடாந்தப் பயண அட்டை மற்றும் ‘வெலிப்’ (Vélib’) மிதிவண்டிச் சந்தா ஆகியவற்றுக்காகச் செலுத்தப்பட்ட கட்டணங்கள் நூறு விழுக்காடு மீளளிக்கப்படவுள்ளன.
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இக்கட்டண மீளளிப்பைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டம்பர் 3-ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
கோரப்படும் அனைத்து ஆவணங்களையும் உள்ளடக்கிய முழுமையான விண்ணப்பக் கோப்புகளைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், சுமார் இரண்டு மாத காலத்திற்குள் இதற்கான முழுமையான கட்டணமும் பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகத் திருப்பியளிக்கப்படும் என நகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது

