பாகிஸ்தான் வைத்தியசாலை. தீ விபத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் Pakistan Institute of Medical Sciences (PIMS) வைத்தியசாலையில் இன்று (26) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் (Nursery) இருந்த குளிரூட்டி (Air Conditioner) ஒன்றின் அமுக்கி வெடித்ததைத் தொடர்ந்து தீ பரவியதாக மீட்புப் பணியாளர்களை மேற்கோள்காட்டி Aaj News செய்தி வெளியிட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசர மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் தீ விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin