இலங்கையில் பாஸ்போட் (கடவுச்சீட்டு ) ஒரே நாளில் எடுப்பதற்கு நடைமுறைகள் என்ன ?

இலங்கையில் பாஸ்போட் (கடவுச்சீட்டு ) ஒரே நாளில் எடுப்பதற்கு நடைமுறைகள் என்ன ?

இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்கான நடைமுறைகளில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. தற்போது கொழும்பு பத்தரமுல்ல அலுவலகத்தில் ஒருநாள் சேவைக்கான டோக்கன்கள் (Tokens) காலை 7:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை வழங்கப்படுகின்றன.

 

1. விண்ணப்பிக்கும் இடங்கள்

தலைமை அலுவலகம்: பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் (Department of Immigration and Emigration, Suhurupaya) தலைமை அலுவலகத்தில் இச்சேவை நேரடியாக வழங்கப்படுகிறது.

 

பிராந்திய அலுவலகங்கள்: கண்டி, மாத்தறை, வவுனியா, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒரு நாள் சேவைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

கைரேகை மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைப் பெறவேண்டி இருப்பதால், விண்ணப்பதாரர் கட்டாயம் நேரில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

 

அச்சிடப்பட்ட புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு (Authorized Photo Studio) சென்று புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சமர்ப்பித்து, அதற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

 

திருத்தப்பட்ட K 35 A விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 

1. கடவுச்சீட்டு சேவைக் கட்டணங்கள்

ஒரே நாள் சேவை (One Day Service): 20,000/- ரூபாய்.

 

சாதாரண சேவை (Normal Service): 10,000/- ரூபாய். (சாதாரண சேவையில் கடவுச்சீட்டு கிடைக்க சராசரியாக மூன்று மாதங்கள் வரை ஆகலாம்).

 

2. ஒன்லைன் (Online) பதிவு முறை

2024.11.06 முதல் புதிய பதிவு முறை அமுலுக்கு வந்துள்ளது.

விண்ணப்பதாரிகள் www.immigration.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக முன்கூட்டியே பதிவு செய்தல் கட்டாயம்.

 

பதிவு செய்வதற்குச் செல்லுபடியான தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் தொலைபேசி இலக்கம் அவசியமாகும். 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்குப் பெற்றோரின் அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தலாம்.

பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், உங்களுக்கு ஒரு SMS குறுஞ்செய்தி வரும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் (முற்பகல் 12:00 மணிக்கு முன்னர்) உரிய அலுவலகத்திற்கு (கொழும்பு, மாத்தறை, கண்டி, குருணாகல் அல்லது வவுனியா) செல்ல வேண்டும்.

Recommended For You

About the Author: admin