YouTube-க்கு புதிய போட்டி வந்திருக்கு Bilibili, அதுவும் சீனாவில் இருந்து!
சீனாவின் YouTube-னு சொல்லப்படுற Bilibili, இப்போ தன்னோட சர்வதேச செயலியை உலகம் முழுக்க அதிகாரப்பூர்வமா கொண்டு வந்திருக்காங்க.
முன்னாடி வெளிநாட்டு படைப்பாளிகள் சேர முடியாம இருந்த கடுமையான ID சரிபார்ப்பு முறையை இப்போ நீக்கிட்டாங்க.
இது சும்மா ஒரு அப்டேட் இல்ல. Los Angeles, London, Tokyo, Mexico City, São Paulo, Istanbul-னு பல நாடுகளில் Community Manager வேலைக்கு ஆட்கள் எடுக்கிறாங்க.
அதோட ஆங்கிலத்தில் தனி வெப்சைட் ஒன்றையும் உருவாக்கி, MrBeast போன்ற பெரிய Western creators-ஐயும் தங்கள் தளத்திற்கு கொண்டு வர முயற்சி பண்றாங்கனு Semafor மற்றும் TechSpot தகவல்கள் சொல்லுது.
Bilibili சாதாரண தளம் இல்ல. 2026 முதல் காலாண்டில் மட்டும் 37.6 கோடிக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய தளங்களில் ஒன்று இது.
இந்த விரிவாக்கம் மூலம் நம்ம ஊர் creators உட்பட உலகம் முழுக்க இருக்கும் படைப்பாளிகளுக்கு இன்னொரு பெரிய மேடை கிடைக்கப் போகுது.
இணைய உலகம் எப்பவுமே ஒரே மாதிரி இருக்காது, போட்டி அதிகமாகும் போது நமக்குத்தான் அதிக வாய்ப்புகளும், சிறந்த கன்டென்ட்டும் கிடைக்கும்.

