சற்றுமுன் A9 வீதி கொக்காவில் பகுதியில் கோர விபத்து

இளநீர் ஏற்றிச்சென்ற வாகனம் மீது டிப்பர் மோதி விபத்து; சாரதி படுகாயங்களுடன் மீட்பு!

​கிளிநொச்சி A9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று (09/08/2026) அதிகாலை வேளையில் டிப்பர் வாகனமும் இளநீர் ஏற்றிச்சென்ற டாடா கப் (Tata Cab) ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து இளநீர்களைச் சுமந்து சென்ற சிறிய ரக டாடா கப் வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது.

இவ்வாறான பலத்த மோதலினால் டாடா கப் வாகனம் கடுமையாகச் சேதமடைந்து வீதிக்கு அருகில் தூக்கி வீசப்பட்டது.

​அதில் கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளநீர்கள் வீதியிலும் வீதி ஓரங்களிலும் சிதறிப் பரவிக் காணப்பட்டன.

​விபத்தில் சிக்கிய டிப்பர் வாகனத்தின் முன்பகுதியும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும்,டிப்பர் வாகனத்தின் சாரதி வாகன இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலத்த காயமடைந்தார்.

​சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சுமார் ஒரு மணித்தியால போராட்டத்திற்குப் பின்னரே சாரதியை மீட்டுள்ளனர்.

படுகாயமடைந்த சாரதி உடனடியாக அவசர சிகிச்சைக்காகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த பொலிஸார், விபத்து நடந்த இடத்தில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் பணிகளுடன், விபத்துக்கான முதன்மைக் காரணம் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin