இலங்கை அன்னாசிக்கு பாகிஸ்தான் சந்தையில் புதிய வாய்ப்பு!

இலங்கையில் இருந்து புதிய அன்னாசிப் பழங்களை பாகிஸ்தான் சந்தைக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இன்று (ஆகஸ்ட் 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

C R Exports (Pvt) Ltd நிறுவனம் மூலம் முதல் 20 அடி கொள்கலன் அன்னாசிகள் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சந்தை வாய்ப்பு இலங்கையின் விவசாய ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் ஆண்டுதோறும் கணிசமான அளவில் அன்னாசியை இறக்குமதி செய்து வரும் நிலையில், இலங்கை அன்னாசியின் தரம், சுவை மற்றும் புதிய தன்மை மூலம் அந்தச் சந்தையில் அதிக வாய்ப்பைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இரு நாடுகளின் தூதரகங்கள், வர்த்தகத் துறை, விவசாயத் துறை மற்றும் தேசிய தாவரத் தனிமைப்படுத்தல் சேவை உள்ளிட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு முக்கிய பங்காற்றியுள்ளது.

Recommended For You

About the Author: admin