மாணவர்களின் பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மாணவர்களின் பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

House of English Addalaichenai கல்வி நிலையத்திற்கு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பாடசாலை பற்சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த பாடசாலை பற்சிகிச்சையாளரான திருமதி Haseena Sathik அவர்களும், உதவியாளரான திருமதி M. Latha அவர்களும் வருகை தந்து மாணவர்களுக்கான வாய்ச் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

 

இந்நிகழ்வின் போது, வாய்ச் சுகாதாரத்தின் முக்கியத்துவம், பற்களை ஆரோக்கியமாகப் பராமரிக்கும் முறைகள் மற்றும் சரியான முறையில் பல் துலக்குவது தொடர்பான பயனுள்ள அறிவுறுத்தல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

 

மேலும், மாணவர்களின் பற்சுகாதார நிலை பரிசோதிக்கப்பட்டதுடன், அவர்களின் தேவைகளுக்கேற்ப ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

 

இவ்வாறான பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய திருமதி Haseena Sathik அவர்களுக்கும், திருமதி M. Latha அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Recommended For You

About the Author: admin