கல்முனை – சாய்ந்தமருது எல்லைகளை நிர்ணயிக்க தேசிய குழு நியமனம்!

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபையின் வட்டார எல்லைகளை நிர்ணயிப்பதற்காக புதிய தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262ஆம் அத்தியாயம்) 3அ (1) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2026 ஒக்டோபர் 30ஆம் திகதியிடப்பட்டு இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவராக எம்.கே.எஸ்.எச். ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், கே. தவலிங்கம், எம்.எம். மொஹமட், கே.எம்.எல். கருணாரத்ன மற்றும் ஒ.டி.எம்.ஐ. திலகரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபையின் வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்த தேசிய குழு முன்னெடுக்கவுள்ளது.

Recommended For You

About the Author: admin